Tuesday, September 4, 2012

சகுனம்.

சகுனம்.




அரசன் ஒரு முறை வேட்டைக்குப் புறப்பட்டபோது, முதலில் நாவிதன் ஒருவன் எதிர்ப்பட்டான். எவ்வளவு அலைந்து திரிந்தும் வேட்டையில் அரசனுக்கு எந்த மிருகமும் சிக்கவில்லை. "அந்த நாவிதனை இழுத்து வந்து தூக்கில் போடுங்கள்..! அவன் முகத்தில் விழித்தத...ுதான் எனக்கு துரதிர்ஷ்டமாகி விட்டது..!" என்று அரசன் ஆணையிட்டான். நாவிதன் கதறக் கதற அரண்மனைக்கு இழுத்து வரப்பட்டான். தெனாலி ராமன் இதைக் கேள்விப்பட்டான். அரசவைக்கு வந்தான்.

"மன்னா..! எனக்கு தெரிந்த இன்னொருவரின் முகம் இதைவிட துரதிர்டமானது. அவருக்கும் இதே தண்டனை விதிக்கபடுமா..?"

"நிச்சயமாக..! யார் அந்த இன்னொருவர்..?"

"நீங்கள்தான் மன்னா..!"

"என்ன திமிர் உனக்கு..?' என்று அரசன் சீறினான்.

"பொய் இல்லை மன்னா..! நாவிதன் முகத்தைப் பார்த்தீர்கள். உங்களுக்கு வேட்டையில் வெற்றி இல்லை.. ஆனால் காலையில் உங்கள் முகத்தை பார்த்த நாவிதனுக்கோ உயிரே போகப் போகிறது. எந்த முகம் அதிகத் துரதிர்ஷ்டவசமானது என்பதை நீங்களே சொல்லுங்கள்..?" என்றான் தெனாலி ராமன்..

No comments:

Post a Comment