Tuesday, September 4, 2012

இயற்கை.

இயற்கை.



குரு தனது நான்கு சீடர்களுக்கு ஏதோ கற்று கொடுக்க கையில் ஒரு கூழாங்கல்லை கொண்டுவந்து, முன்பாக அதை வைத்தார். அவர்களைப் பார்த்து மெல்லமாகச் சிரித்தார்.சீடர்கள் யோசித்தார்கள். சீடர்கள் ஆளாளுக்குப் பேச ஆரம்பித்தார்கள்.


"ஒருகாலத்தில் இந்தக் கல் நன்கு கரடுமுரடாக இருந்தது, பின்னர் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த முரட்டுத்தன்மையை இழந்து மென்மையடைந்து இப்படி அழகாக மாறியிருக்கிறது..!"

என்றார் ஒருவர்.


"இதுபோல, நாமும் நம் வாழ்க்கையில் தவறுகளைக் குறைத்துக்கொண்டால் மேன்மை அடை...வோம்"

என்று முடித்தார் இன்னொருவர்.


"ஒரு கூழாங்கல் நதியின் போக்கில் உருண்டு செல்கிறது. எதிர்த்து முரண்டு பிடிப்பதில்லை. அந்தப் பயணத்தை ஏற்றுக்கொண்டு அனுபவிக்கிறது, அதுதானே..!" என்றார் மூன்றாவது சீடர்.


நான்காவது சீடர்மட்டும் எதுவும் பேசவில்லை. மௌனமாக அந்தக் கல்லைப் பார்த்து அதன் அழகை, நேர்த்தியை வியந்துகொண்டிருந்தார். நெடுநேரம் கழித்து ஒரே ஒரு புன்னகைமட்டும் அவரது உதடுகளில் மலர்ந்தது. குருநாதர் அந்த நான்காவது சீடரின்அருகில் சென்று முதுகில் மகிழ்ச்சியோடு தட்டிக்கொடுத்தார்.


இயற்கையிடம் பாடம் கற்றுக்கொள்வது இரண்டாம் பட்சமே.. அதை அனுபவித்து உணர்ந்து ரசிப்பதே உயர்ந்தது. ஆமாம் எட்ட நின்று அருவியின் வேகத்தை அளக்கும் அறிஞன் இல்லை நான்.., அதில் மூழ்கி கும்மாளமிடும் ஒரு முட்டாளே நான்.

No comments:

Post a Comment