Tuesday, September 4, 2012

யோகியிடம்...

.தியானத்தில் இருந்த யோகியிடம் ஒரு தேவன் குறுக்கிட்டு யோகியே "உங்களுக்கு உதவுவதற்காக நான் கடவுளால் அனுப்பப்பட்டு இருக்கிறேன்..!" என்று வணங்கி நின்றான். யோகி புன்னகைத்தார். "வேறு யாரோ என்று நினைத்து நீ என்னிடம் வந்திருக்கிறாய்.. என் தேடலில் நா...ன் கடவுளின் உதவியை கேட்கவில்லையே..!" என்று சொல்லிவிட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார் யோகி.



தயவுசெய்து நீ நாஸ்திகனா என்று கேட்டு விடாதீர்கள்.., கடவுளை விடவும் முக்தியை மட்டுமே இலக்காக வைத்தவர் நாம் மட்டுமே என்பதை நீங்களும் அறிந்ததே. அது மட்டும் அல்ல.., நம் கடவுள்கள் குழப்பங்களை சந்தித்ததாகவும் அவர்கள் நம் ஞானியர்களிடம் வந்து தீர்வு பெற்றதாகவுமே நாம் புராணங்களில் பார்க்கிறோம். கடவுளைவிட மனிதத்துவத்தின் உயர்வை மிக உயர்வாக பார்த்தவர்களும் நாமே. இதைப்போல் வேறு எந்த கலாச்சாரங்களிலும் இல்லை...

1 comment:

  1. மிக நன்று .பல சிறு சம்பவங்களை தொகுத்து அளித்து வருவது நல்ல முயற்சி. பாரம்பாியங்களை இந்துமதம் என்ற லேபல் ஒட்டி வெறுக்க வேண்டாம்.

    ReplyDelete