Tuesday, September 4, 2012

புகழ்..

ஊதுபத்தி.




ஒருபெரிய செல்வந்தர் ஒருவர் ஒரு துறவியை பார்க்க வந்தார். "சுவாமி.. உங்களைமாதிரி பெரிய ஞானி ஏன் இப்படி ஊர் ஊராக அலையவேண்டும்? என்றார். உங்களுக்கு நான் ஒரு பிரமாதமான ஆசிரமம் அமைத்துத் தருகிறேன்.. நீங்கள் அங்கேயே தங்கியிருந்து உங்களுடிய தியானங்களைத் தொடரலாம்.., நாடுமுழுவதிலும் இருந்து மக்கள் உங்களைத் தேடி வந்து பாடம் கற்றுக்கொள்வார்கள்..!"

துறவி சிரித்தார்..,



"அது எனக்குச் சரிப்படாது.. மன்னித்துவிடுங்கள்..!" என்றார்.



"ஏன் சுவாமி அப்படிச் சொல்கிறீர்கள்..? உங்களுடைய பு...கழ் நாடுமுழுவதும் பரவவேண்டும் என்று நான் விரும்புகிறேன்..!"



"உங்கள் எண்ணத்தில் தவறில்லை.., ஓர் ஊதுபத்தியை ஏற்றிவைத்தால் அறைமுழுவதும் நறுமணம் கமழ்கிறது. ஆனால் கொஞ்சநேரம் கழித்து அந்த ஊதுபத்தியே காணாமல் போய்விடுகிறது..! அப்படிச் சுயத்தை இழந்து புகழ் பரப்புவதால் யாருக்கு என்ன லாபம்..?" என்றார் துறவி.



செல்வம், புகழ், பதவி, மரியாதை போன்றவை கத்தியை நக்கித் தேன் குடிப்பது போல.., அந்த சுவைக்கு ஆசைப் பட்டால், நாக்கு போய்விடும். ஆற்றில் ஏந்திக் குடிக்கிற பச்சைத் தண்ணீர் போதும் என்பதை நன்றாக உணர்ந்தவர்கள் ஞானியர்கள்..

1 comment:

  1. MY AZHAGI SOFT WARE IS CORRUPTED SO I AM REPLYING IN ENGLISH

    "THEN WHAT IS THE GOAL OF LIFE:"

    arravaazhi ki srinivasan

    ReplyDelete