Tuesday, September 4, 2012

புகழ்..

ஊதுபத்தி.




ஒருபெரிய செல்வந்தர் ஒருவர் ஒரு துறவியை பார்க்க வந்தார். "சுவாமி.. உங்களைமாதிரி பெரிய ஞானி ஏன் இப்படி ஊர் ஊராக அலையவேண்டும்? என்றார். உங்களுக்கு நான் ஒரு பிரமாதமான ஆசிரமம் அமைத்துத் தருகிறேன்.. நீங்கள் அங்கேயே தங்கியிருந்து உங்களுடிய தியானங்களைத் தொடரலாம்.., நாடுமுழுவதிலும் இருந்து மக்கள் உங்களைத் தேடி வந்து பாடம் கற்றுக்கொள்வார்கள்..!"

துறவி சிரித்தார்..,



"அது எனக்குச் சரிப்படாது.. மன்னித்துவிடுங்கள்..!" என்றார்.



"ஏன் சுவாமி அப்படிச் சொல்கிறீர்கள்..? உங்களுடைய பு...கழ் நாடுமுழுவதும் பரவவேண்டும் என்று நான் விரும்புகிறேன்..!"



"உங்கள் எண்ணத்தில் தவறில்லை.., ஓர் ஊதுபத்தியை ஏற்றிவைத்தால் அறைமுழுவதும் நறுமணம் கமழ்கிறது. ஆனால் கொஞ்சநேரம் கழித்து அந்த ஊதுபத்தியே காணாமல் போய்விடுகிறது..! அப்படிச் சுயத்தை இழந்து புகழ் பரப்புவதால் யாருக்கு என்ன லாபம்..?" என்றார் துறவி.



செல்வம், புகழ், பதவி, மரியாதை போன்றவை கத்தியை நக்கித் தேன் குடிப்பது போல.., அந்த சுவைக்கு ஆசைப் பட்டால், நாக்கு போய்விடும். ஆற்றில் ஏந்திக் குடிக்கிற பச்சைத் தண்ணீர் போதும் என்பதை நன்றாக உணர்ந்தவர்கள் ஞானியர்கள்..

ஆன்மீகம்

அரியாசனத்தை துறந்த புத்தர். முதன் முதலாய் இராஜகிருக நகரில் ஒருநாள் முதன் முதலாக பிச்சை எடுத்தார். திருவோட்டில் சேர்ந்த உணவுடன் அவர் ஊருக்கு வெளியே ஒதுக்கு புறத்தில் போய் உணவருந்த அமர்ந்தார். ஓட்டில் இருந்து ஒரு பிடி எடுத்து வாயில் போடுகிறார...். வாய் குமட்டுகிறது. அரண்மனை அறுசுவை உணவு எங்கே..? கண்டவர் வீடுகளில் வாங்கிய கதம்ப சோறு எங்கே..? உணவு உள்ளே செல்ல மறுத்தது..! ஆனால் என் பெருமான் வெளியே தள்ள மறுத்தார். உலகின் துன்பத்தை எல்லாம் ஒழித்துகட்ட வந்த உத்தமர் பிச்சை சோற்றுக்கு புறங்கொடுத்து ஒடுவாரா..? எப்படியோ உள்ளத்தை உரமேற்றி கொண்டு அவர் அதை உண்டார். அப்போது அவருக்கு வயது 29. அன்றில் இருந்து 80 வயது வரை பிச்சை சோறே உண்டு வாழ்ந்தார்.



ஆன்மீக பிச்சை உழைக்க வழியின்றி உயிர் பிழைப்பதற்காக எடுப்பது இல்லை.., அது நான் என்ற ஆனவத்தை அழிப்பதற்காக ஆன்மீகம் வைக்கும் முதலிடம்.

இயற்கை.

இயற்கை.



குரு தனது நான்கு சீடர்களுக்கு ஏதோ கற்று கொடுக்க கையில் ஒரு கூழாங்கல்லை கொண்டுவந்து, முன்பாக அதை வைத்தார். அவர்களைப் பார்த்து மெல்லமாகச் சிரித்தார்.சீடர்கள் யோசித்தார்கள். சீடர்கள் ஆளாளுக்குப் பேச ஆரம்பித்தார்கள்.


"ஒருகாலத்தில் இந்தக் கல் நன்கு கரடுமுரடாக இருந்தது, பின்னர் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த முரட்டுத்தன்மையை இழந்து மென்மையடைந்து இப்படி அழகாக மாறியிருக்கிறது..!"

என்றார் ஒருவர்.


"இதுபோல, நாமும் நம் வாழ்க்கையில் தவறுகளைக் குறைத்துக்கொண்டால் மேன்மை அடை...வோம்"

என்று முடித்தார் இன்னொருவர்.


"ஒரு கூழாங்கல் நதியின் போக்கில் உருண்டு செல்கிறது. எதிர்த்து முரண்டு பிடிப்பதில்லை. அந்தப் பயணத்தை ஏற்றுக்கொண்டு அனுபவிக்கிறது, அதுதானே..!" என்றார் மூன்றாவது சீடர்.


நான்காவது சீடர்மட்டும் எதுவும் பேசவில்லை. மௌனமாக அந்தக் கல்லைப் பார்த்து அதன் அழகை, நேர்த்தியை வியந்துகொண்டிருந்தார். நெடுநேரம் கழித்து ஒரே ஒரு புன்னகைமட்டும் அவரது உதடுகளில் மலர்ந்தது. குருநாதர் அந்த நான்காவது சீடரின்அருகில் சென்று முதுகில் மகிழ்ச்சியோடு தட்டிக்கொடுத்தார்.


இயற்கையிடம் பாடம் கற்றுக்கொள்வது இரண்டாம் பட்சமே.. அதை அனுபவித்து உணர்ந்து ரசிப்பதே உயர்ந்தது. ஆமாம் எட்ட நின்று அருவியின் வேகத்தை அளக்கும் அறிஞன் இல்லை நான்.., அதில் மூழ்கி கும்மாளமிடும் ஒரு முட்டாளே நான்.

சகுனம்.

சகுனம்.




அரசன் ஒரு முறை வேட்டைக்குப் புறப்பட்டபோது, முதலில் நாவிதன் ஒருவன் எதிர்ப்பட்டான். எவ்வளவு அலைந்து திரிந்தும் வேட்டையில் அரசனுக்கு எந்த மிருகமும் சிக்கவில்லை. "அந்த நாவிதனை இழுத்து வந்து தூக்கில் போடுங்கள்..! அவன் முகத்தில் விழித்தத...ுதான் எனக்கு துரதிர்ஷ்டமாகி விட்டது..!" என்று அரசன் ஆணையிட்டான். நாவிதன் கதறக் கதற அரண்மனைக்கு இழுத்து வரப்பட்டான். தெனாலி ராமன் இதைக் கேள்விப்பட்டான். அரசவைக்கு வந்தான்.

"மன்னா..! எனக்கு தெரிந்த இன்னொருவரின் முகம் இதைவிட துரதிர்டமானது. அவருக்கும் இதே தண்டனை விதிக்கபடுமா..?"

"நிச்சயமாக..! யார் அந்த இன்னொருவர்..?"

"நீங்கள்தான் மன்னா..!"

"என்ன திமிர் உனக்கு..?' என்று அரசன் சீறினான்.

"பொய் இல்லை மன்னா..! நாவிதன் முகத்தைப் பார்த்தீர்கள். உங்களுக்கு வேட்டையில் வெற்றி இல்லை.. ஆனால் காலையில் உங்கள் முகத்தை பார்த்த நாவிதனுக்கோ உயிரே போகப் போகிறது. எந்த முகம் அதிகத் துரதிர்ஷ்டவசமானது என்பதை நீங்களே சொல்லுங்கள்..?" என்றான் தெனாலி ராமன்..

கடவுளிடம்

கடவுளிடம் கடவுளை கேள்.




ஒரு அரசன் தனக்கு ஆபத்தில் உதவிய மூவரை பார்த்து உங்களுக்கு என்ன வேணும் என கேட்டான். ஒருவன் வைரமாலை என்றான். இன்னொருவன் உன் அரச சபைபில் வேலை வேணும் என்றான். முன்றாதவனோ "அரசே..! எனக்கு நீங்கள் இந்த தினத்தில் வருசத்துக்க...ு ஒருமுறை என் வீட்டிற்கு வந்து தங்கி விட்டு போனால் போதும் அதுவே எனக்கு மகிழ்ச்சி..!" என்றான்.

அரசன் தங்கவேணும் என்பதால் மந்திரி நோட்டமிட்டார் அவன் கிராமத்தை, அழகாக புனரமைத்து அவனதுவீட்டையும் இடித்து இன்னும் பெரிதாய் கட்டி அழகாக்கினார் மந்திரி. அரசன் தன் மகளோடுவந்து தங்கினான். அரசனது மகள் அவனோடு காதல் கொண்டு இருவருக்கும் திருமனமாகி. அவன் பின்னர் அரசனாகவே ஆகிவிட்டான்.


இதே போல் தான் நாம் நமது சிற்றிவுக்கு ஏற்ப கடவுளிடம் இதைகொடு அதைகொடு என கேட்டு வாங்கி அதைமட்டும் பெற்று கொள்கிறோம். கடவுளேயே கேட்டால் அவன் எல்லையற்றவையை தருவதற்கு காத்து இருக்கிறான். என்பதை இந்த ராமகிருஷ்ணரின் கதைமூலம் அறியலாம். இதைதான் நம் முன்னோர் "கோவிலுக்கு போய் கேட்டவர்கள் கேட்தை மட்டும் வாங்கி வந்தார்கள், கேட்காமல் வந்தவர்கள் கடவுளையே கூட்டி வந்தார்கள்" என்றனர்

யோகியிடம்...

.தியானத்தில் இருந்த யோகியிடம் ஒரு தேவன் குறுக்கிட்டு யோகியே "உங்களுக்கு உதவுவதற்காக நான் கடவுளால் அனுப்பப்பட்டு இருக்கிறேன்..!" என்று வணங்கி நின்றான். யோகி புன்னகைத்தார். "வேறு யாரோ என்று நினைத்து நீ என்னிடம் வந்திருக்கிறாய்.. என் தேடலில் நா...ன் கடவுளின் உதவியை கேட்கவில்லையே..!" என்று சொல்லிவிட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார் யோகி.



தயவுசெய்து நீ நாஸ்திகனா என்று கேட்டு விடாதீர்கள்.., கடவுளை விடவும் முக்தியை மட்டுமே இலக்காக வைத்தவர் நாம் மட்டுமே என்பதை நீங்களும் அறிந்ததே. அது மட்டும் அல்ல.., நம் கடவுள்கள் குழப்பங்களை சந்தித்ததாகவும் அவர்கள் நம் ஞானியர்களிடம் வந்து தீர்வு பெற்றதாகவுமே நாம் புராணங்களில் பார்க்கிறோம். கடவுளைவிட மனிதத்துவத்தின் உயர்வை மிக உயர்வாக பார்த்தவர்களும் நாமே. இதைப்போல் வேறு எந்த கலாச்சாரங்களிலும் இல்லை...

புத்தர் முதல்முதலாய் தடுமாறினார்.

புத்தர் முதல்முதலாய் தடுமாறினார்.


------------------------------------------------------



என்ன..! எல்லம் அறிந்த ஞானி புத்தர்கூட தடுமாறினாரா..? உடனே என்ன அவசரம். எல்லாத்துக்கும் உங்களுக்கு அவசரம்தான்..! ஒன்னும் அவசரம் இல்ல. அதோ புத்தர் ஒரு ஊருக்கு உபதேசம் செய்ய ஆனந்தருடன் போகிறார். கொஞ்ச தூரம்தான்..! வாருங்கள் நாமும் அவர்களோடு பயணிப்போம்.

புத்தர் அந்த ஊருக்கு செல்ல தனது அரண்மனை வழியாக செல்லவேண்டியதாக இருந்கிறது. எப்படியும் அவரி...ன் ஊர் வழியாக சென்றால், உற்றார் உறவினர், தம் குடும்பத்தாரை எல்லாம் சந்திக்க வேண்டிவருமே. அப்படி அவர்களை சந்தித்தால்.., அவர்கள் மிக வருந்துவார்களே..! முக்கியமாய் அவரின் மனைவி யசோதா இந்த செய்தியை கேள்விப்பட்டால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவாளே என்று வருந்தினார் புத்தர். இருந்தாலும்.., எல்லாரையும் தன் அன்பால் சமாதானப்படுத்திவிட முடியும் என்று முழுமையாய் நம்பினார். தன் பிறந்த தேசத்திற்குள் அடியெடுத்து வைத்ததும். மக்கள் குதூகலித்தனர்.. கூக்குரலிட்ட விழுந்து தொழுது எதேதோ செய்து தம் அன்பை வெளிப்படுத்தினர்.


அப்போது புத்தரின் முக்கிய சீடர் ஆனந்தர் கேட்டார். "உங்கள் நாட்டில் இப்படி அன்பான மக்கள் இருக்க..! எப்படி இவர்களைவிட்டு வர முடிந்தது..?" புத்தர் சொன்னார், "அவர்கள் அன்பை வெளியில் தேடியும்.., கண்டுகொண்டும்விடுகிறார்கள். நானோ உள்ளே தேடவேண்டி இருந்தது. அதனால் வந்தேன்." என்றார். புத்தர் மீண்டும் சொன்னார். "ஆனந்தா.. நிச்சயம் நான் தடுமாற போகிறேன். என் பாதையை கவனி என்று புன்னகைத்தார்..!"


ஆனந்தருக்கோ ஆச்சரியம். மிகவும் சுத்தமான புதிதாக இடப்பட்ட தெருவில் கண்ணுகெட்டிய தூரம் வரை எந்த பள்ளமோ கல்லோ கட்டைகளோ இல்லை. புத்தரும் தெம்பாய் தெளிவாய் நடக்கிறார். எப்படி தடுமாற போகிறார் என்று சிந்தித்தபடியே நடந்தார்.


அங்கே தூரத்தில் ஒரு அரண்மனை தெரிந்தது. அடுத்த சில நிமிடங்களில்.திடீரென. ஒரு பெரும் கூட்டமாக மக்கள் அரண்மனையில் இருந்து வெளியே ஓடிவந்தனர். புத்தரை நோக்கி கைக்கூப்பி நின்றனர். சிலர் சாஷ்டாங்கமாய் விழுந்து தொழுதனர்.


அப்போது ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண். வணங்குவதற்கான எந்த செய்கைகளும் இல்லாமல் புத்தரை நோக்கி வந்தாள். புத்தரும் நேரே சென்றவண்ணம் இருந்தார். அந்த பெண்ணின் கண்களில் நீர்விட ஆரம்பித்தார். கைகள் அதுவாக கூப்பிநின்றன.


அந்த அம்மையாரின் அருகில் வந்துநின்றார் புத்தர்.

"நலமா..?" என்றார் அந்த பெண்.


"நலம் யசோதா..!" என்றார் புத்தர்.


"ஒரு கேள்வி கேட்கலாமா..?" என்றாள் யசோதா.


"எங்கெங்கோ காடுமலைகள் சுற்றி திரிந்து அடைந்த ஒன்றை...!


இந்த அரண்மனையிலேயே அடைந்திருக்க முடியாதா..?" என்றார்.


புத்தர் வாயெடுத்தார்..., ஆனால் சொல் வரவில்லை. முயன்றார். ஆனால் முடியவில்லை..!


இப்போதுதான் ஆனந்தர் புத்தர் முதல்முறையாக தடுமாறுவதை பார்க்கிறார். எதுவும் பேசாமல் புத்தர் மெளனமாக அந்த இடத்தை விட்டு விலகி சென்றார். ஆனந்தருக்கோ ஆச்சரியம்..! புத்தரிடம் கேட்டார்.., "ஏன் தடுமாறினீர்கள் புத்தரே..?"


புத்தர் சொன்னார்.., "ஞானமடைவதற்கு இந்த இடம்தான் சிறந்தது என்று எதுவுமில்லை என்று எனக்கு தெரியும். அதை வீட்டிலும், காட்டிலும் எங்கும் அடையலாம். எங்கும் அடையலாம் என்று சொல்லி அவளுக்கு புரியவைக்கவும் முடியுமா..? அல்லது அரண்மனையில் முடியாது என்று அவளிடம் பொய் சொல்லவும் முடியுமா..?" என்றார் புத்தர்.


ஆனந்தர் தெளிவாய் புன்னகைத்தார். புத்தருடன் பயணத்தை தொடர்ந்தார். நாமும் இவர்களோடு உள்ளோக்கிய பயணத்தை தெடர்வோமே..!



எல்லை இல்லாத தேசத்துக்கு நான் சொந்தகாரன்.

எல்லை இல்லாத தேசத்துக்கு நான் சொந்தகாரன்.




மன்னன் ஊர்வலம் வந்தான். தெரு ஓரத்தில் ஞானி ஒருவரின் எளிமையும் திருப்தியான மகிழ்ச்சியும் சாந்தமும் அவனை ஆச்சரிய படவைத்தது. அருகில் சென்று.., "ஆறு தேசம் எனக்கிருந்தும் திருப்தி இல்லை. இவ்வளவு குறைவான...செல்வம் இருந்தும் எப்படி நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்கள்..?" என கேட்டான் மன்னன்.


"மன்னா என்னைவிட குறைவான செல்வம் உள்ள நீ இதை சொல்வதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது..! எனக்கு காற்று, வானம், பூமி, சந்திரன், சூரியன், அண்டவெளி, பிரஞ்சம்..! ஏன் அதற்கு அப்பால் என்னுள் படைத்தவனே இருக்கிறான். எல்லை இல்லாத தேசத்துக்கு நான் சொந்தகாரன்..! என்று சிரித்தார் ஞானி.


நீங்களும் மனதின் சிறுவட்டத்தை விட்டு வெளியே வந்தால் புரியும். நான் இந்த உடல் அல்ல, முழுபிரபஞ்ஞமே நான் என்பது.

ஜென்கவி




ஒரு பெண் துறவி பல வ...ருடங்களாக ஞான நூல்களை கற்றும்.., பயிற்சி எடுத்தும்கூட ஞானம் கிடைக்கவில்லை. இதில் அவளுக்கு மிகவும் வருத்தம். ஒரு பௌர்ணமி இரவு. அவள் ஆற்றில் தண்ணீர் எடுத்து கொண்டு ஆசிரமத்தை நோக்கி நடந்தாள். தூக்கி வந்த குடம் மிகப் பழமையாது. பாதி வழியில் கைதவறி அது கீழே விழுந்து உடைந்து போக.. தண்ணீர் தரையெங்கும் சிந்தி வீணாவதைப் பார்த்ததும்.., ஞானம் பிறந்தது. உடனே இந்த கவிதை எழுதினாள்.   நான் என்னால் முடிந்தவரை இந்தக் குடத்தைக் காப்பாற்றப் பார்த்தேன். முடியவில்லை..! உடைந்துவிட்டது..! இப்போது இந்தக் குடத்தில் துளி தண்ணீரும் மிச்சமில்லலை..! இப்போது இந்தத் தண்ணீரில் துளி நிலாவும் மிச்சமில்லை..!"

-ஜென்கவி

உங்கள் வயது என்ன..?

உங்கள் வயது என்ன..?




குருவிடம் ஒருவர் கேட்டார்.

"குருவே, உங்கள் வயது என்ன..?"

"ஏழு வயது..!"குரு சற்றும் யோசிக்காமல் சொன்ன பதில்.

"என்னது..? ஏழு வயதா..? நம்பமுடியவில்லையே..!"

..."என்னுடைய முதல் ஐம்பது வருடங்களுக்குமேல் ஞானத்தைப்பற்றி எதுவும் தெரியாமல் வீணாகக் கழித்தேன். அதன்பிறகுதான் எனக்கு ஒரு நல்ல குருநாதர் கிடைத்தார்.., சரியான பாதை கிடைத்தது.., ஞானத்தைத் தேடத் தொடங்கினேன்.., இயற்கையை, இறைவனை, உலகத்தை, இவை ஒவ்வொன்றையும் ரசித்து அனுபவிக்கிற மனோநிலை கிடைத்தது.. அதன்பிறகு வாழ்ந்த ஏழு வருடங்களைமட்டுமே நான் என்னுடைய உண்மையான வாழ்நாளாகக் கருதுகிறேன்.. அதனால்தான் என் வயது ஏழு என்று சொன்னேன்..!"


இப்போ நீங்க சொல்லுங்க.. உங்களுக்கு எத்தனை வயது..?

எந்தப் பிரிவு?

எந்தப் பிரிவு?




"ஆன்மீகத்தில் தான் எத்தனை பிரிவுகள் இதில் எந்தப் பிரிவில் நாம் சேர்வது? ஒன்றில் சேர்ந்தால் இன்னொன்றை மறுக்கவேண்டுமோ? வெறுக்கவேண்டுமோ? அது எப்படி நியாயமாகும்? எல்லாம் ஆன்மீகம் தானே..? "

இப்படி யோசித்துக் கவலைப்பட்டு எந்தப் பி...ரிவிலும் சேராமல். என்ன செய்யலாம் என்று புரியாமலே சுற்றிச் சுற்றி வந்தார் ஒருவர்.

அப்போதுதான் அவர் ஒரு துறவியை பற்றிக் கேள்விப்பட்டு

அவரைக் காண சென்றார்.

"ஐயா, நீங்கள் எந்தப்

பிரிவைச் சேர்ந்தவர்?" என்று விசாரித்தார்.

"எந்தப் பிரிவும் இல்லை..!"

"அப்படியா..? நிஜமாகவா சொல்கிறீர்கள்..?"

"ஆமாம். எனக்குத் தெரிந்ததெல்லாம் தியானம் செய்வது, என்னுடைய உடலாலும் மனத்தாலும் புத்தரை உணர்வது, அவ்வளவுதான்!"

சட்டென்று அவருடைய காலில் விழுந்து "ஐயா, இவ்வளவு நாளாக உங்களைதான் தேடிக்கொண்டிருந்தேன். என்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள்..!"


மதங்கள் மனிதரை பிரிக்கும் அடையாளங்கள் அல்ல. அவை உள்ளத்தை மேன்மையாக வைத்திருக்க, உயர்நிலையை அடைய உள்நோக்கி போவற்காக உருவாகியவையே..

அவசியம் இல்லை.

அவசியம் இல்லை.




யோகி ஒருவர், தீவிரமான மௌனதை மேற்கொண்டிருந்தார்.

அவர் முப்பது வருடங்களுக்கு ஒருமுறைதான் பேசுவார். அதுவும் ஒரு நிமிடம்தான் பேசுவார். அதன்பிறகு மீண்டும் மௌனமாகிவிடுவார்.

இன்றைக்கு அந்த முப்பது வருடங்கள் முடியப்போகின்றன.

அந்தத் யோகியின் ஆசிரமத்தில் ஏகப்பட்ட பக்தர்கள் வந்து குவிந்திருந்தார்கள். எல்லோரும் அவருடைய ஒரு நிமிடப் பேச்சைக் கேட்டுவிடவேண்டும் என்கிற தவிப்பில் இருந்தார்கள்.


யோகி, "எல்லோருக்கும் வணக்கம்..!"

ஒருவர் கேட்டார், "நீங்கள் இப்படி மௌன விரதம் இருக்க ...வேண்டிய அவசியம் என்ன..? எங்களிடம் பேசுவதால், சொற்பொழிவுகள் ஆற்றி உங்களது ஞானத்தைப் பகிர்ந்து கொடுப்பதால் என்ன குறைந்து விடும்..?"


யோகி சிரித்தார்.. "நான் பேசவேண்டும் என்று நீங்கள் நினைப்பவை எல்லாம் பேசத் தகுதியற்றவை..! அவற்றைப் பேசிப் பிரயோஜனம் இல்லை.."என்றார்.


"பரவாயில்லை குருவே.., நீங்கள் தகுதியுள்ளதாக நினைப்பதை பிரயோஜனம் உள்ளவற்றைமட்டுமாவது பேசலாமே..?"


"தகுதியுள்ளவற்றை யாரும் பேசவேண்டிய அவசியம் இல்லை..!"என்றார் யோகி. ஒரு நிமிடப் பேச்சு முடிந்தது. முப்பது வருட மௌனம் தொடங்கியது.


தன்னை உணர்ந்துவிட்ட ஞானியர்கள் பலர் இன்னும் மெளனமாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் பேசவேண்டிய அவசியமோ, யாரையும் தமது பக்கம் திருப்ப வேண்டிய அவசியமோ இல்லை.