Tuesday, September 4, 2012

சகுனம்.

சகுனம்.




அரசன் ஒரு முறை வேட்டைக்குப் புறப்பட்டபோது, முதலில் நாவிதன் ஒருவன் எதிர்ப்பட்டான். எவ்வளவு அலைந்து திரிந்தும் வேட்டையில் அரசனுக்கு எந்த மிருகமும் சிக்கவில்லை. "அந்த நாவிதனை இழுத்து வந்து தூக்கில் போடுங்கள்..! அவன் முகத்தில் விழித்தத...ுதான் எனக்கு துரதிர்ஷ்டமாகி விட்டது..!" என்று அரசன் ஆணையிட்டான். நாவிதன் கதறக் கதற அரண்மனைக்கு இழுத்து வரப்பட்டான். தெனாலி ராமன் இதைக் கேள்விப்பட்டான். அரசவைக்கு வந்தான்.

"மன்னா..! எனக்கு தெரிந்த இன்னொருவரின் முகம் இதைவிட துரதிர்டமானது. அவருக்கும் இதே தண்டனை விதிக்கபடுமா..?"

"நிச்சயமாக..! யார் அந்த இன்னொருவர்..?"

"நீங்கள்தான் மன்னா..!"

"என்ன திமிர் உனக்கு..?' என்று அரசன் சீறினான்.

"பொய் இல்லை மன்னா..! நாவிதன் முகத்தைப் பார்த்தீர்கள். உங்களுக்கு வேட்டையில் வெற்றி இல்லை.. ஆனால் காலையில் உங்கள் முகத்தை பார்த்த நாவிதனுக்கோ உயிரே போகப் போகிறது. எந்த முகம் அதிகத் துரதிர்ஷ்டவசமானது என்பதை நீங்களே சொல்லுங்கள்..?" என்றான் தெனாலி ராமன்..

கடவுளிடம்

கடவுளிடம் கடவுளை கேள்.




ஒரு அரசன் தனக்கு ஆபத்தில் உதவிய மூவரை பார்த்து உங்களுக்கு என்ன வேணும் என கேட்டான். ஒருவன் வைரமாலை என்றான். இன்னொருவன் உன் அரச சபைபில் வேலை வேணும் என்றான். முன்றாதவனோ "அரசே..! எனக்கு நீங்கள் இந்த தினத்தில் வருசத்துக்க...ு ஒருமுறை என் வீட்டிற்கு வந்து தங்கி விட்டு போனால் போதும் அதுவே எனக்கு மகிழ்ச்சி..!" என்றான்.

அரசன் தங்கவேணும் என்பதால் மந்திரி நோட்டமிட்டார் அவன் கிராமத்தை, அழகாக புனரமைத்து அவனதுவீட்டையும் இடித்து இன்னும் பெரிதாய் கட்டி அழகாக்கினார் மந்திரி. அரசன் தன் மகளோடுவந்து தங்கினான். அரசனது மகள் அவனோடு காதல் கொண்டு இருவருக்கும் திருமனமாகி. அவன் பின்னர் அரசனாகவே ஆகிவிட்டான்.


இதே போல் தான் நாம் நமது சிற்றிவுக்கு ஏற்ப கடவுளிடம் இதைகொடு அதைகொடு என கேட்டு வாங்கி அதைமட்டும் பெற்று கொள்கிறோம். கடவுளேயே கேட்டால் அவன் எல்லையற்றவையை தருவதற்கு காத்து இருக்கிறான். என்பதை இந்த ராமகிருஷ்ணரின் கதைமூலம் அறியலாம். இதைதான் நம் முன்னோர் "கோவிலுக்கு போய் கேட்டவர்கள் கேட்தை மட்டும் வாங்கி வந்தார்கள், கேட்காமல் வந்தவர்கள் கடவுளையே கூட்டி வந்தார்கள்" என்றனர்

யோகியிடம்...

.தியானத்தில் இருந்த யோகியிடம் ஒரு தேவன் குறுக்கிட்டு யோகியே "உங்களுக்கு உதவுவதற்காக நான் கடவுளால் அனுப்பப்பட்டு இருக்கிறேன்..!" என்று வணங்கி நின்றான். யோகி புன்னகைத்தார். "வேறு யாரோ என்று நினைத்து நீ என்னிடம் வந்திருக்கிறாய்.. என் தேடலில் நா...ன் கடவுளின் உதவியை கேட்கவில்லையே..!" என்று சொல்லிவிட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார் யோகி.



தயவுசெய்து நீ நாஸ்திகனா என்று கேட்டு விடாதீர்கள்.., கடவுளை விடவும் முக்தியை மட்டுமே இலக்காக வைத்தவர் நாம் மட்டுமே என்பதை நீங்களும் அறிந்ததே. அது மட்டும் அல்ல.., நம் கடவுள்கள் குழப்பங்களை சந்தித்ததாகவும் அவர்கள் நம் ஞானியர்களிடம் வந்து தீர்வு பெற்றதாகவுமே நாம் புராணங்களில் பார்க்கிறோம். கடவுளைவிட மனிதத்துவத்தின் உயர்வை மிக உயர்வாக பார்த்தவர்களும் நாமே. இதைப்போல் வேறு எந்த கலாச்சாரங்களிலும் இல்லை...

புத்தர் முதல்முதலாய் தடுமாறினார்.

புத்தர் முதல்முதலாய் தடுமாறினார்.


------------------------------------------------------



என்ன..! எல்லம் அறிந்த ஞானி புத்தர்கூட தடுமாறினாரா..? உடனே என்ன அவசரம். எல்லாத்துக்கும் உங்களுக்கு அவசரம்தான்..! ஒன்னும் அவசரம் இல்ல. அதோ புத்தர் ஒரு ஊருக்கு உபதேசம் செய்ய ஆனந்தருடன் போகிறார். கொஞ்ச தூரம்தான்..! வாருங்கள் நாமும் அவர்களோடு பயணிப்போம்.

புத்தர் அந்த ஊருக்கு செல்ல தனது அரண்மனை வழியாக செல்லவேண்டியதாக இருந்கிறது. எப்படியும் அவரி...ன் ஊர் வழியாக சென்றால், உற்றார் உறவினர், தம் குடும்பத்தாரை எல்லாம் சந்திக்க வேண்டிவருமே. அப்படி அவர்களை சந்தித்தால்.., அவர்கள் மிக வருந்துவார்களே..! முக்கியமாய் அவரின் மனைவி யசோதா இந்த செய்தியை கேள்விப்பட்டால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவாளே என்று வருந்தினார் புத்தர். இருந்தாலும்.., எல்லாரையும் தன் அன்பால் சமாதானப்படுத்திவிட முடியும் என்று முழுமையாய் நம்பினார். தன் பிறந்த தேசத்திற்குள் அடியெடுத்து வைத்ததும். மக்கள் குதூகலித்தனர்.. கூக்குரலிட்ட விழுந்து தொழுது எதேதோ செய்து தம் அன்பை வெளிப்படுத்தினர்.


அப்போது புத்தரின் முக்கிய சீடர் ஆனந்தர் கேட்டார். "உங்கள் நாட்டில் இப்படி அன்பான மக்கள் இருக்க..! எப்படி இவர்களைவிட்டு வர முடிந்தது..?" புத்தர் சொன்னார், "அவர்கள் அன்பை வெளியில் தேடியும்.., கண்டுகொண்டும்விடுகிறார்கள். நானோ உள்ளே தேடவேண்டி இருந்தது. அதனால் வந்தேன்." என்றார். புத்தர் மீண்டும் சொன்னார். "ஆனந்தா.. நிச்சயம் நான் தடுமாற போகிறேன். என் பாதையை கவனி என்று புன்னகைத்தார்..!"


ஆனந்தருக்கோ ஆச்சரியம். மிகவும் சுத்தமான புதிதாக இடப்பட்ட தெருவில் கண்ணுகெட்டிய தூரம் வரை எந்த பள்ளமோ கல்லோ கட்டைகளோ இல்லை. புத்தரும் தெம்பாய் தெளிவாய் நடக்கிறார். எப்படி தடுமாற போகிறார் என்று சிந்தித்தபடியே நடந்தார்.


அங்கே தூரத்தில் ஒரு அரண்மனை தெரிந்தது. அடுத்த சில நிமிடங்களில்.திடீரென. ஒரு பெரும் கூட்டமாக மக்கள் அரண்மனையில் இருந்து வெளியே ஓடிவந்தனர். புத்தரை நோக்கி கைக்கூப்பி நின்றனர். சிலர் சாஷ்டாங்கமாய் விழுந்து தொழுதனர்.


அப்போது ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண். வணங்குவதற்கான எந்த செய்கைகளும் இல்லாமல் புத்தரை நோக்கி வந்தாள். புத்தரும் நேரே சென்றவண்ணம் இருந்தார். அந்த பெண்ணின் கண்களில் நீர்விட ஆரம்பித்தார். கைகள் அதுவாக கூப்பிநின்றன.


அந்த அம்மையாரின் அருகில் வந்துநின்றார் புத்தர்.

"நலமா..?" என்றார் அந்த பெண்.


"நலம் யசோதா..!" என்றார் புத்தர்.


"ஒரு கேள்வி கேட்கலாமா..?" என்றாள் யசோதா.


"எங்கெங்கோ காடுமலைகள் சுற்றி திரிந்து அடைந்த ஒன்றை...!


இந்த அரண்மனையிலேயே அடைந்திருக்க முடியாதா..?" என்றார்.


புத்தர் வாயெடுத்தார்..., ஆனால் சொல் வரவில்லை. முயன்றார். ஆனால் முடியவில்லை..!


இப்போதுதான் ஆனந்தர் புத்தர் முதல்முறையாக தடுமாறுவதை பார்க்கிறார். எதுவும் பேசாமல் புத்தர் மெளனமாக அந்த இடத்தை விட்டு விலகி சென்றார். ஆனந்தருக்கோ ஆச்சரியம்..! புத்தரிடம் கேட்டார்.., "ஏன் தடுமாறினீர்கள் புத்தரே..?"


புத்தர் சொன்னார்.., "ஞானமடைவதற்கு இந்த இடம்தான் சிறந்தது என்று எதுவுமில்லை என்று எனக்கு தெரியும். அதை வீட்டிலும், காட்டிலும் எங்கும் அடையலாம். எங்கும் அடையலாம் என்று சொல்லி அவளுக்கு புரியவைக்கவும் முடியுமா..? அல்லது அரண்மனையில் முடியாது என்று அவளிடம் பொய் சொல்லவும் முடியுமா..?" என்றார் புத்தர்.


ஆனந்தர் தெளிவாய் புன்னகைத்தார். புத்தருடன் பயணத்தை தொடர்ந்தார். நாமும் இவர்களோடு உள்ளோக்கிய பயணத்தை தெடர்வோமே..!



எல்லை இல்லாத தேசத்துக்கு நான் சொந்தகாரன்.

எல்லை இல்லாத தேசத்துக்கு நான் சொந்தகாரன்.




மன்னன் ஊர்வலம் வந்தான். தெரு ஓரத்தில் ஞானி ஒருவரின் எளிமையும் திருப்தியான மகிழ்ச்சியும் சாந்தமும் அவனை ஆச்சரிய படவைத்தது. அருகில் சென்று.., "ஆறு தேசம் எனக்கிருந்தும் திருப்தி இல்லை. இவ்வளவு குறைவான...செல்வம் இருந்தும் எப்படி நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்கள்..?" என கேட்டான் மன்னன்.


"மன்னா என்னைவிட குறைவான செல்வம் உள்ள நீ இதை சொல்வதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது..! எனக்கு காற்று, வானம், பூமி, சந்திரன், சூரியன், அண்டவெளி, பிரஞ்சம்..! ஏன் அதற்கு அப்பால் என்னுள் படைத்தவனே இருக்கிறான். எல்லை இல்லாத தேசத்துக்கு நான் சொந்தகாரன்..! என்று சிரித்தார் ஞானி.


நீங்களும் மனதின் சிறுவட்டத்தை விட்டு வெளியே வந்தால் புரியும். நான் இந்த உடல் அல்ல, முழுபிரபஞ்ஞமே நான் என்பது.

ஜென்கவி




ஒரு பெண் துறவி பல வ...ருடங்களாக ஞான நூல்களை கற்றும்.., பயிற்சி எடுத்தும்கூட ஞானம் கிடைக்கவில்லை. இதில் அவளுக்கு மிகவும் வருத்தம். ஒரு பௌர்ணமி இரவு. அவள் ஆற்றில் தண்ணீர் எடுத்து கொண்டு ஆசிரமத்தை நோக்கி நடந்தாள். தூக்கி வந்த குடம் மிகப் பழமையாது. பாதி வழியில் கைதவறி அது கீழே விழுந்து உடைந்து போக.. தண்ணீர் தரையெங்கும் சிந்தி வீணாவதைப் பார்த்ததும்.., ஞானம் பிறந்தது. உடனே இந்த கவிதை எழுதினாள்.   நான் என்னால் முடிந்தவரை இந்தக் குடத்தைக் காப்பாற்றப் பார்த்தேன். முடியவில்லை..! உடைந்துவிட்டது..! இப்போது இந்தக் குடத்தில் துளி தண்ணீரும் மிச்சமில்லலை..! இப்போது இந்தத் தண்ணீரில் துளி நிலாவும் மிச்சமில்லை..!"

-ஜென்கவி

உங்கள் வயது என்ன..?

உங்கள் வயது என்ன..?




குருவிடம் ஒருவர் கேட்டார்.

"குருவே, உங்கள் வயது என்ன..?"

"ஏழு வயது..!"குரு சற்றும் யோசிக்காமல் சொன்ன பதில்.

"என்னது..? ஏழு வயதா..? நம்பமுடியவில்லையே..!"

..."என்னுடைய முதல் ஐம்பது வருடங்களுக்குமேல் ஞானத்தைப்பற்றி எதுவும் தெரியாமல் வீணாகக் கழித்தேன். அதன்பிறகுதான் எனக்கு ஒரு நல்ல குருநாதர் கிடைத்தார்.., சரியான பாதை கிடைத்தது.., ஞானத்தைத் தேடத் தொடங்கினேன்.., இயற்கையை, இறைவனை, உலகத்தை, இவை ஒவ்வொன்றையும் ரசித்து அனுபவிக்கிற மனோநிலை கிடைத்தது.. அதன்பிறகு வாழ்ந்த ஏழு வருடங்களைமட்டுமே நான் என்னுடைய உண்மையான வாழ்நாளாகக் கருதுகிறேன்.. அதனால்தான் என் வயது ஏழு என்று சொன்னேன்..!"


இப்போ நீங்க சொல்லுங்க.. உங்களுக்கு எத்தனை வயது..?