Tuesday, June 5, 2012

புத்தர் அவருடைய சீடன் ஆனந்தாவிடம் 'நிலையாமையை'ப் பார்க்கச் சொன்னார். ஒவ்வொரு மூச்சிலும் மரணத்தை பார்க்கச் சொன்னார். மரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்; வாழ்வதற்காகச் சாகவேண்டும். அப்படியென்றால் என்ன? இறப்பதென்றால் நம் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் முடிவு கண்டு நிகழ் காலத்தின் உண்மையான நிலையில் இருப்பது தான். நாம் நாளைக்கு இறக்க முடியாது; இப்போதே இறக்க வேண்டும். உங்களால் செய்ய முடியுமா? முடியுமென்றால் கேள்விகளே இல்லாத அமைதி உங்களுக்குத் தெளிவாக விளங்கும். நம் பிறப்பும் இறப்பும் ஒன்றுதான். ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்கமுடியாது. மக்கள் இறப்பின் போது அழுவதையும் துக்கப் படுவதையும், பிறப்பின் போது மகிழ்ந்து பூரிப்பதையும் பார்க்கும் போது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது. இது தவறான கருத்து. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செய்கை. அழவேண்டுமென்றால் பிறக்கும் போது அழுவதே சரியானது. ஏனென்றால் பிறப்பில்லாமல் இறப்பில்லை. புரிகிறதா உங்களுக்கு. இந்திய இளைஞர்களே! பெருஞ்செயல்களைச் செய்து முடிப்பதில் எப்போதும் முன்னேறிச் செல்லுங்கள். ஏழைகளிடமும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களிடமும் இரக்கம் காட்டும் போது, நமக்கு மரணமே வாய்த்தாலும் கூட, அவர்களுக்கு இரக்கம் காட்டுவதே நமது லட்சியமாகும்.. துன்பம் ஏற்படாமலிருக்க வழி பிரியம் உள்ளவரைக் காண்பதும், பிரியம் இல்லாதவரைக் காண்பதும் வேதனை தரும். பிரியம் உள்ளவரிடமிருந்து பிரிவது வேதனைதான். பிரியம் ... இல்லாதவனிடம் அன்பில்லை. அதனால் வேதனைதான் மிஞ்சும். துன்பத்தை அழிக்கத் தூய வாழ்க்கை வாழுங்கள். உன் துன்பத்திற்கு எது காரணமாய் இருந்தாலும் இன்னொருவரைப் புண்படுத்தாதே. துன்பம் ஏற்படாமலிருக்க வழி எதிலும் ஆசை வேண்டாம். ஆசைப்பட்ட பொருளை இழப்பது துன்பம்தான். ஆசையும் பொருளும் அற்றவனுக்கு விலங்குகள் இல்லை. ... கோபத்தை கைவிடு. செருக்கை கைவிடு. உலகப் பற்றுக்கள் அனைத்தையும் ஒழி. எதையும் தனது என்று நினையாதவனுக்குத் துன்பங்கள் ஏற்படுவதில்லை. துன்பம் ஏற்படாமலிருக்க வழி சம்சார யாத்திரையை முடித்துக் கொண்டவனுக்கு, துக்கத்திலிருந்து நீங்கியவனுக்கு, பற்றுக்களிலிருந்து விடுதலை பெற்றவனுக்கு எல்லா விலங்குகளையும் உடைத்தெறிந்தவனுக்கு துன்பம் ஏற்படுவதில்லை. துன்பம் ஏற்படாமலிருக்க வழி துன்பம் இத்தகையது என்று உணர்ந்தால், நாம் துன்பப்படுவோர் அனைவரையும் நம் சகோதரர்களாகப் பாவிப்போம். துன்பம் ஏற்படாமலிருக்க வழி தன் பகைவனால் ஏற்படும் துன்பத்தைக் காட்டிலும், தன்னை வெறுப்பவனால் ஏற்படும் துன்பத்தைக் காட்டிலும், அடக்கம் இல்லாத மனம் ஒருவனுக்கு அதிகத் துன்பத்தைத் தருகிறது. துன்பம் ஏற்படாமலிருக்க வழி மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும், செயல் புரிந்தாலும் வண்டிச்சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வதுபோல துக்கம் அவனைத் தொடர்ந்து செல்லும். எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! நீங்களும் விழித்திருங்கள், மற்றவர்களையும் விழிக்கச் செய்யுங்கள். உங்களுடைய இந்த உலக வாழ்க்கை முடிவடைவதற்கு முன்னால் மனிதப் பிறவியினால் பெறுவதற்கரிய பெரிய நன்மையை அடையுங்கள். மரணமே வந்தாலும் கலங்காதீர்கள் * நாம் அனைவரும் உண்மையானவர்களாகத் திகழ்வோமாக. லட்சியத்தை நம்மால் பின்பற்ற முடியவில்லை என்றால், நமது பலவீனத்தை நாம் ஒப்புக் கொள்வோம். லட்சியத்தை நாம் இழிவுபடுத்தாமல் இருக்க வேண்டும். லட்சியத்தைத் தாழ்ந்த நிலைமைக்குக் கொண்டு செல்ல எவரும் வேண்டாம் * இந்திய இளைஞர்களே! பெருஞ்செயல்களைச் செய்து முடிப்பதில் எப்போதும் முன்னேறிச் செல்லுங்கள். ஏழைகளிடமும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களிடமும் இரக்கம் காட்டும் போது, நமக்கு மரணமே வாய்த்தாலும் கூட, அவர்களுக்கு இரக்கம் காட்டுவதே நமது லட்சியமாகும். மரணமே வந்தாலும் கலங்காதீர்கள் * நாம் அனைவரும் உண்மையானவர்களாகத் திகழ்வோமாக. லட்சியத்தை நம்மால் பின்பற்ற முடியவில்லை என்றால், நமது பலவீனத்தை நாம் ஒப்புக் கொள்வோம். லட்சியத்தை நாம் இழிவுபடுத்தாமல் இருக்க வேண்டும். லட்சியத்தைத் தாழ்ந்த நிலைமைக்குக் கொண்டு செல்ல எவரும் வேண்டாம். தர்ம சிந்தனைகள் மனதிலிருந்து உதயமாகிறது. தர்ம சிந்தனைகளே மனமாகிறது . தீய சிந்தனைகளும் தீய செயல்களும், இழுத்துச் செல்லும் எருதுகளைப் பின்தொடர்ந்து செல்லும் வண்டியைப் போல , அவனுக்கு துன்பத்தையேத் தரும். கடவுள் அல்லது ஒரு ஒருமிய சக்தி உலகை தோற்றுவிக்கிவில்லை என்பது பெளத்தத்தில், புத்தர் போதனைகளில் முக்கிய ஒரு கொள்கை. இக்கொள்கையை தமிழில் சார்பிற்றோற்றக் கொள்கை என்றும் சமஸ்கிரதத்தில் பிரதித்தியசமுப்பாதம் என்றும் ஆங்கிலத்தில் Dependent Origination என்பர். * சத்தியத்தையே தீபமாகப் பற்றிக் கொள்ளுங்கள். சுயநலத்தை ஒழித்து எல்லா உயிர்களையும் நேசியுங்கள். ஒழுக்கம் என்னும் அடித்தளத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். தூங்க முடியாமல் விழித்திருப்பவனுக்கு இரவு கொடியதாகும். களைத்துப் போனவனுக்கு செல்லும் வழி மலைப்பைத் தரும். அதுபோல தர்மத்தை பின்பற்றாதவனுக்கு வாழ்க்கை துன்பத்தைத் தரும் வரையறுக்கப்பட்ட உணர்கிற பொருள் எல்லாம் நிலையற்றவை என்று "அனைத்தும் புரிந்த அந்த ஒருவனுக்குத்" தெளிவாகத் தெரியும். அதனால் அந்த "அனைத்தும் தெரிந்தவன்" மகிழ்வதும் இல்லை; வருந்துவதும் இல்லை. ஏனெனில் மாறிக்கொண்டிருக்கும் நிலைமைகளை அவன் தொடர்வதில்லை. மகிழ்ச்சியடைவது பிறப்பதற்குச் சமம்; சோர்வடைவது இறப்பதற்குச் சமம். இறந்த பிறகு மறுபடியும் பிறக்கின்றோம். பிறந்ததால் மறுபடியும் இறக்கின்றோம். நொடிக்கு நொடி பிறப்பதும் இறப்பதும் தான் முடிவற்றுச் சுழன்று கொண்டிருக்கும் சம்சார சக்கரமாகும் ‎1. சாதி ஒழிய வேண் டும் 2. சாதி ஒழிய இந்து மதம் ஒழிய வேண் டும். அதன் வர்ணசிரம தர்மம் ஒழிய வேண்டும் 3. இவை ஒழியாமல் பாதுகாப்பவர்களாகவும் இந்த இந்து வர்ண சிரம சாதி அமைப்பில் பலனடைபவர்களாகவும் இருப்பவர்கள் பார்ப்பனர்கள், 4. இவர்களின் பார்ப்பனர்களின் சமூக ஆதிக்கத்தை ஒழிக்காமல் மேற்கூறிய நோக்கங்கள் ... நிறைவேறாது. எனவே இவர்களை இவர்களின் ஆதிக்கத்தை முழு மூச்சாக எதிர்க்க வேண்டும் 5. இந்த இந்து வர்ணசிரம அமைப்பை வைத்துக் கொண்டு தீண்டாமையை எதிர்ப்பேன் அல்லது ஒழிப்பேன் என்று சொல்கிற காந்தி கபட வேடதாரி. அவரையும் எதிரியாக இனங் காணுதல் மற்றும் காட்டுதல் 6. மாற்று சமூக நடவடிக்கைகளாக இட ஒதுக்கீடு அரசியலையும் கலாச்சாரத் தளத்தில் கலப்பு திருமணத்தையும் தூக்கிப் பிடித்தது. .கடவுளே இல்லை என்று உலகுக்கு போதித்தவன் புத்தன் அவனையே கும்பிடுகிறான் ஒரு பித்தன். ஆம் நண்பர்களே பெளத்தம் என்பது இல்லறம் செழிக்கும் நல்வாழ்விற்கான பாதை அல்லது ஒரு தத்துவம். வாழ்வை இன்பமாக கழிக்க உலக ஆசைகளை துறக்கவேண்டும், அன்பை மட்டுமே வளர்க்க வேண்டும்; அமைதியான தியானத்தின் மூலம் மனிதன் இந்த ஞானத்தை அடையவேண்டும் என்கிறார் புத்தர். இரக்கத்தோடும் உபகார சிந்தையோடும் இருப்பது மகிழ்ச்சியோடு இருப்பதாகும...். உலகத்தில் உள்ளும் புறமும் அறிவற்ற வஸ்து எதுவும் கிடையாது. உலகத்தின் பொருள்கள் யாவும் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண் டேயிருக்கின்றன. தோன்றியது அழியும். கோவணாண்டி கோலமோ ஜடை முடியோ, அழுக்கேறிய உடம்போ, பட்டினி கிடத்தலோ, மண்மீது புரளுவதோ, மூச்சை அடக்கி உட்கார்ந்திருத்தலோ, ஆசை வெல்லாத ஒருவனை பரிசுத்தவானாக்கி விடாது. முட்டாள்களுடன் கூடி வாழ்வதை விட தனியாக வாழ்வதே மேல். பேசாமல் சும்மா உட்கார்ந்திருப்பவனையும் திட்டுகிறார்கள். அதிகம் பேசுபவனையும் திட்டுகிறார்கள். திட்டப்படாத மனிதனே உலகத் தில் இல்லை. எப்பொழுதுமே திட்டப்படுபவனாக அல்லது எப்பொழுதுமே போற்றப்படுபவனாக ஒரு மனிதன் இருந்ததும் இல்லை; இருக்கவும் இல்லை; இருக்கப் போவதும் இல்லை. இத்தகைய புத்தரின் போதனைகள் ஆரம்ப காலங்களில் நெறிகளாக தத்துவங்களாக விளங்கியது, பின்னர் கால ஓட்டத்தில் இது ஒரு மதமாக தோற்றம் பெற்றுவிட்டது. எவ்வாறு இருந்தாலும் பெளத்த மதத்தவர்கள் இன்று புத்தரின் கொள்கைகளை சரிவர பின்பற்றுகிறார்களா என்பது என் சிற்றறிவிற்கு சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது. புத்தர் மன்னனாக சகல செளபாக்கியங்களோடு வாழ்ந்த போதும் உலக ஆசைகளையெல்லாம் துறந்து கானகம் சென்று வாழ்ந்தார். மக்களிடம் பிச்சை எடுத்து உண்டார், துறவிகளுக்கும் அவ்வாறே போதித்தார். உணவிற்கு பஞ்சத்தினாலா இல்லை மக்களுக்கு கொடுக்கும் எண்ணம் வளரவேண்டும் என்பதற்காக. புத்தர் (கி.மு.563-கி.மு.483) இளவரசர் சித்தார்த்தர் எனும் இயற்பெயருடைய கௌதம் புத்தர் பெரும் சமயங்களுள் ஒன்றான பௌத்த சமயத்தை நிறுவியவராவார். சித்தார்த்தர் வடகிழக்கு இந்தியாவில் நேப்பாள எல்லையின் அருகிலுள்ள கபில வஸ்து எனும் நகரை ஆண்டு வந்த மன்னரின் மைந்தர் (கௌதம குடும்பத்தையும் சாக்கிய குலத்தையும் சேர்ந்த) சித்தார்த்தர் இன்றைய நேப்பாள எல்லைக்குள்ளிருக்கும் லும்பினியில் கி.மு. 563 இல் பிறந்ததாகக் கூறப்படுகின்றது. அவர் தமது 16 ஆம் வயதில் ஒத்த வயதுள்ள உறவினளைத் திருமணம் செய்து கொண்டார். செல்வம் கொழிக்கும் அரண்மனையில் பிறந்த சித்தார்த்தர் இளவரசருக்கு இன்ப நலன்களுக்குக் குறைவில்லை. ஆயினும் அவர் ஆழ்ந்த அதிருப்தியடைந்திருந்தார். மனிதருள் பலர் ஏழையாக இருப்பதையும், தொடர்ந்து வறுமையில் துன்புறுவதையும், எல்லோரும் நோயுற்று இறுதியில் இறப்பதையும் கண்டார். மறைந்து போகும் இன்பங்களை விட மேலானாதொன்று வாழ்க்கையில் உண்டென்றும், அவற்றை எல்லாம் துன்பமும் இறப்பும் விரைவில் அழித்தொழிக்கும் என்றும் சித்தார்த்தர் கருதினார். கௌதமர் தமது 29 ஆம் வயதில் தம் மூத்த மகன் பிறந்ததும் தாம் வாழ்ந்து வந்த வாழ்கையை துறந்து உண்மையை நாடுவதில் முழு முயற்சியுடன் ஈடுபடத் தீர்மானித்தார். தம் மனைவி, மழலை மகன், உடமைகள் எல்லாம் துறந்து அரண்மனையை விட்டு வெளியேறி, கையில் காசின்றி அலைந்து திரிந்தார். சிறிது காலம் அவர் அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த அறவோரிடம் பயின்றார். அவர்களுடைய போதனைகளை நன்கு கற்ற பின், மனித வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்கள் காட்டிய வழி தமக்கு மன நிறைவளிக்கவில்லை யெனக் கண்டார். கடுமையான துறவே உண்மையான அறிவை அடையும் வழியென்று அப்போது பரவலாக நம்பப்பட்டு வந்தது. ஆகவே கௌதமரும் கடுந்துறவியாக முயன்று, பல ஆண்டுகளாக கடும் நோன்பையும், ஒறுத்தலையும் மேற் கொண்டார். ஆயினும் நாளடைவில் உடலை வருத்துவதால் உள்ளம் குழம்புவதையும் உண்மையான அறிவை அடைய இயலவில்லை என்பதையும் உணர்ந்தார். ஆகவே அவர் வழக்கம் போல் உண்டு, கடுந்துறவைக் கைவிட்டார். வாழ்க்கைப் பிரச்சினைக்களுக்குத் தீர்வு காண அவர் தனிமையில் கடுஞ் சிந்தனையில் ஆழ்ந்தார். இறுதியில் ஒரு நாள் மாலையில் அவர் ஒரு பெரிய அத்தி மரத்தடியில் அமர்ந்திருந்த போது, தம்மைக் குழப்பிய பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கிடைப்பது போல் அவருக்கு தோன்றியது. சித்தார்த்தர் இரவு முழுவதும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார். மறுநாள் காலையில் தாம் ” அறவொளி பெற்ற ” ஒரு புத்தர் என்றும் உறுதியாக உணர்ந்தார். அப்போது அவருக்கு 35 வயது. எஞ்சிய 45 ஆண்டுகளில் அவர் வட இந்தியா முழுவதும் சென்று கேட்க விரும்பிய அனைவருக்கும் தமது புதிய கோட்பாட்டைப் போதித்து வந்தார். கி.மு. 483 இல் அவர் இறப்பதற்குள் ஆயிரக்கணக்கான மக்களை மதம் மாற்றினார். அவர் கூறியவை எழுதப் பெறவில்லை யெனினும், அவருடைய சீடர்கள் அவர் போதனைகள் பலவற்றை மனப்பாடம் செய்திருந்தனர். அவை வாய்மொழி மூலமாகத் தலைமுறையாகப் பரவின. புத்தரின் முக்கியப் போதனைகளைப் பௌத்தர்கள் ” நான்கு உயர் உண்மைகள்” எனச் சுருக்கமாகக் கூறுவர். முதலாவது, மனித வாழ்க்கை இயல்பாகவே துயருடையது. இரண்டாவது, இத்துயரின் காரணம் மனிதனின் தன்னலமும் ஆசையுமாகும். மூன்றாவது, தனி மனிதன் தன்னலத்தையும் ஆசையையும் அடக்கிவிடலாம். எல்லா ஆசைகளும் ஆவல்களும் ஒழிந்த இறுதி நிலை (” அணைதல் அல்லது அவிதல்” எனப் பொருள்படும்) ” நிர்வாணம்” எனப்படும். நான்காவது, தன்னலம், ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும் ” எட்டு வகைப் பாதை” எனப்படும். அவை, நேர்மையான பேச்சு, நேர்மையான செயல், நேர்மையான வாழ்க்கை, நேர்மையான முயற்சி, நேர்மையான தியானம், பௌத்த சமயத்தில் இன வேறுபாடின்றி அனைவரும் சேரலாம். (இந்து சமயம் போலன்றி) இதில் சாதி வேறுபாடு இல்லை. கௌதமர் இறந்த பின் கொஞ்ச காலம் இப்புதிய சமயம் மெதுவாகப் பரவியது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பெரும் இந்தியப் பேரரசரான அசோகர் பௌத்த சமயத்தை தழுவினார். அவரது ஆதரவினால் பௌத்த சமயச் செல்வாக்கும் போதனைகளும் இந்தியாவில் விரைவாகப் பரவியதுடன், பௌத்த சமயம் அண்டை நாடுகளுக்கும் பரவியது. தெற்கில் இலங்கையிலும், கிழக்கே பர்மாவிலும் பௌத்த சமயம் பரவியது. அங்கிருந்து அது தென்கிழக்கு ஆசியா முழுவதும், மலேசியாவிலும், இன்றைய இந்தோனேசியாவிலும் பரவியது. பௌத்த சமயம் வடக்கே திபெத்திலும், வடமேற்கில் ஆப்கானிஸ்தானிலும், மத்திய ஆசியாவிலும் பரவியது. அது சீனாவிலும் பரவியது. அங்கு ஏராளமான மக்கள் அதைத் தழுவினர். அங்கிருந்து அது கொரியாவிற்கும், ஜப்பானுக்கும் பரவியது. இந்தியாவினுள் இப்புதிய சமயம் கி.பி. 500 – க்குப் பிறகு நலிவுறத் தொடங்கி, கி.பி. 1200 – க்குப் பிறகு ஏறக்குறைய முழுவதும் மறைந்து விட்டது. ஆனால் சீனாவிலும், ஜப்பானிலும் அது முக்கிய சமயமாக இருந்தது. திபெத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பல நூற்றாண்டுகளாக அது தலையாய சமயமாக இருந்து வந்துள்ளது. புத்தர் இறந்து பல நூற்றாண்டுகள் வரை அவருடைய போதனைகள் எழுதப் பெறவில்லை. ஆகவே இவரது இயக்கம் பல கிளைகளாகப் பிரிந்தது பௌத்த சமயத்தின் இரு முக்கிய கிளைகளுள் ஒன்று தேரவதா பிரிவு. இது தென்கிழக்கு ஆசியாவில் தழைத்தோங்கியது. இதுவே புத்தர் போதித்த போதனைகளுடன் நெருங்கிய தொடர்புடையதென மேல் நாட்டு அறிஞர் பலர் கருதுகின்றனர். மற்றொரு கிளை மகாயானம். இது பொதுவாக திபெத், சீனா, வட ஆசியாவில் செழித்தோங்கியது. உலகப் பெரும் சமயங்களுள் ஒன்றை நிறுவியவரான புத்தர் இப்பட்டியலில் உயரிடம் பெற தகுதியுடையவர். 80 கோடி முஸ்லீம்களும், 100 கோடி கிறிஸ்தவர்களும் இருக்கும் இவ்வுலகில் 20 கோடி பௌத்தர்களே இருப்பதால், நபிகள் நாயகமும் கிறிஸ்து பெருமானும் கவர்ந்ததை விடக் குறைந்த எண்ணிக்கையுள்ள மக்களையே புத்தர் கவர்ந்தார் என்பது போல் தோன்றுகிறது. ஆயினும் எண்ணிக்கை வேறுபாட்டைக் கொண்டு நாம் தவறான முடிவுகளுக்கு வரலாகாது. பௌத்த சமயத்தின் கருத்துகளையும் கொள்கைகளையும இந்து சமயம் ஈர்த்துக் கொண்டது. பௌத்த சமயம் இந்தியாவில் மறைந்ததற்கு அது ஒரு காரணமாகும். சீனாவில் கூட தம்மை பௌத்தர்களெனக் கருதாதவர் பலரை பௌத்தக் கோட்பாடுகள் கவர்ந்துள்ளன. கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயங்களை விட பௌத்த சமயம் பெரும் அமைதி இயல்புடையது. இன்னா செய்யாமைக் கொள்கை பௌத்த சமய நாடுகளில் அரசியல் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளது. கிறிஸ்து பெருமான் திரும்பவும் உலகிற்கு வருவாரானால் தமது பெயரால் நடைபெறும் பலவற்றைக் கண்டு அதிர்ச்சியடைவரெனவும், அவரைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் வெவ்வேறு பிரிவினரிடையே நிகழும் கொடிய போராட்டங்களைப் பார்த்துத் திகிலடைவாரெனவும் பலமுறை சொல்லப் படுகின்றது. புத்தரும் பௌத்தக் கோட்பாடுகளெனக் கூறப்படும் பல கோட்பாடுகளைக் கண்டு வியப்படைவாரென்பதில் ஐயமில்லை. ஆனால் பௌத்த சமயத்தில் பல கிளைகள் இருப்பினும், இக்கிளைகளிடையே பெரும் வேறுபாடுகள் இருப்பினும், கிறிஸ்துவ ஐரோப்பாவில் நிகழ்ந்தவை போன்ற கொடிய சமயப் போர்கள் பௌத்த வரலாற்றில் நிகழ்ந்ததில்லை. இதைப் பொறுத்தவரையில், கிறிஸ்துவின் போதனைகள் அவரைப் பின்பற்றியவரிடையே மிகுதியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது போல் தோன்றுகிறது. புத்தரும் கன்ஃபூசியஸிம் உலகை ஏறக்குறைய ஒரேயளவில் கவர்ந்துள்ளனர். இருவரும் ஏறக்குறைய ஒரே காலத்தில் வாழ்ந்தனர். அவர்களைப் பின்பற்றியவர்களின் தொகையும் மிகுதியாக வேறுபடவில்லை. நான் புத்தரைக் கன்ஃபூசியஸிக்கு முன்னால் வைப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, சீனாவில் பொதுவுடமைக் கொள்கை தோன்றியதிலிருந்து கன்ஃபூசியஸின் செல்வாக்கு மிகவும் குறைந்து விட்டது. வருங்காலத்தில் கன்ஃபூசியஸின் கருத்துகளை விட புத்தரின் கொள்கைகளே மிக முக்கியமாகக் கருதப்படுமெனத் தெரிகின்றது. இரண்டாவது, கன்ஃபூசியக் கோட்பாடு சீனாவிற்கு வெளியே பரவவில்லை என்பது முந்திய சீன மனப்பாங்கில் கன்ஃபூசியஸின் கருத்துகள் எவ்வளவு மெதுவாகப் பதிந்திருந்தன என்பதைக் காட்டுகிறது. ஆனால் புத்தரின் போதனைகளோ முந்திய இந்தியக் கோட்பாட்டைத் திரும்பக் கூறுவதாக அமையவில்லை. கௌதம புத்தரின் கருத்துகள் புதுமையாக இருந்தாலும், அவருடைய கோட்பாடு பலரைக் கவர்ந்ததாலும், பௌத்த சமயம் இந்திய எல்லையைக் கடந்து மிகத் தொலைவில் பரவியது.

No comments:

Post a Comment